Sunday, March 2, 2014

காமம் அசிங்கம் இல்லை...


      இப்பக்கத்திற்கு வருகை தரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் வணக்கம்.

புதிய பக்கம், ஆனால் அதே பழைய சிந்தனை, அதில் மெறுகேறிய புதிய சிந்தனை. இவையேல்லாம் சேர்ந்தே இப்பக்கத்தை ஆளப்போகின்றன. லக்ஷ்மிகாந்தன் என்பது என் நூலுக்கான புனைப்பெயர். அப்புனைபெயரிலே இவ்வலைபூவை தொடங்கிருக்கிறேன். இனிமேல் இவ்வலைபதிவிலே என் பதிவுகள் வரும்.

முதல் பதிவு: காமத்தில் இருந்து ஆரம்பிப்போம். அதுதான் இன்று புரிதல் இல்லாத பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதனால் அப்பதிவையே முதலில் எழுதுகிறேன். வாசியுங்கள். வாசித்து தங்கள் மேலான கருத்துகளை பதிவிடுங்கள்.

                           

ஒரு காதலன், ஒரு காதலிக்கு பொது இடத்தில் ஆசையாய் முத்தம் கொடுத்தால் அக்காட்சியை அதை பார்பவர்கள், இப்படிதான் சொல்வார்கள்.. "பப்ளிக் ப்லேசுல.. போய், இப்படி அசிங்க பண்ணுதுங்கலே.என்று. இதுதில் என் கருத்து என்னவென்றால், அவனுக்கு பிடித்த பொண்ணுக்கு அவன் தன் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுக்கிறான். முத்தம்தான் அன்பின் உச்சபட்ச வெளிப்பாடு, இதில் நாம் அசிங்கம் என்று சொல்வதற்கு அப்படி என்ன இருக்கிறது. இதையும் ஒஷொ ஆழமாக பதிவு செய்கிறார்.

இரண்டு நாயிங்க அதுங்க இஷ்டப்பட்டு அதன் ஜோடியுடன் உடலுறவு கொண்டாலே காமப் புரிதல் இல்லாதவர்கள் அதைக் கல்லை விட்டு எரிவார்கள். அப்படி இல்லை என்றால், ஒருமாதிரி முகம் சுளித்து கொண்டு செல்வார்கள். ஐந்தறிவு உள்ளதையே அனுமதிக்காத அவர்கள், ஒத்த ஆறறிவு உள்ள காதலர்களை எப்படி அனுமதிப்பார்கள். இதில் ஓஷோ சொல்வதுதான் என் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்லுவார், “நோய்வாய்ப்பட்ட சமுகம்தான்  பார்ப்பதை எல்லாம் அசிங்கம் என நினைக்கும்” என்று..

காமத்தை எல்லோரும் திருட்டுத்தனமாக ரசிப்பது பின்பு அதை பொதுவில் எல்லோருடனும் சேர்ந்து எதிர்ப்பது. இது  காமதிர்க்கே  உண்டான முரண்பாடான நிலை...

ஒன்று தெரியுங்களா... இயற்கை, அசிங்கம் என நினைத்தால் அதன் பரிமாணத்தில் எதுவும் படைக்கபடாமலே போயிருக்கும். நாம் உண்ணும் உணவும், அருந்தும் நீரும், சுவாசிக்கும் காற்று, இவை அனைத்திலும் காமம் நிறைந்துள்ளது. அது என்றும் நமக்கு நிறைவை கொடுக்கிறது. ஆனால் இதில் நாம்தான் உண்மையான நிறைவுடன் வாழவில்லை. இதுதான் மறுக்கமுடியாத உண்மை.

 காமத்தை ஒருமுறை முழுமையாக சுவைத்தாலே அதை விட்டு , நாம் தாண்டி வந்துவிடலாம். ஆனால் தேனை உருசிக்கண்ட வண்டுப் போல அதையே திகட்ட, திகட்ட உண்டு கடைசியில் அதிலே  விழுந்து செத்தே போய்விடுகிறோம். காமத்தை பற்றிய முழு புரிதல் இருந்தால் காமம் இயற்கையின் படைப்பில் மிக அற்புதமானது என்பதை நாம் உணரலாம்.

காமம்தான் அன்பின் நுழைவுவாயில் காமத்தை தாண்டினால்தான் அன்பினை நாம் காணமுடியும். தம்பதிகள் மணிவிழா எதற்கு கொண்டாடுகிறார்கள். அது காமம் கடந்த அன்பின் பாதை. அங்கு காமம் இல்லாமல், அன்பே புரிதலாக இருக்கும். அதனால் புரிதலான  கமத்தை நாம் வரவேற்போம். புரிதல் இல்லையென்றால் அப்புரிதலை உண்டாக்குவோம். அதைவிடுத்து காமமே அசிங்கம் என்று நாம் சொன்னால் அது என்றும் ஏற்புடையதாக இருக்காது.

 என்றும் நட்புடன்:
'லக்ஷ்மிகாந்தன்' (RK.Guru)